என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் 2-வது சுரங்கத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. மேலும் பாய்லர் வெடித்த இடத்தில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 17 பேர் என்.எல்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அருண், பத்மநாபன், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் ஆகிய 5 பேர் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு மேல் பாய்லர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பழுதடைந்த பழைய பாய்லர்கள் செயல்பட்டு வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதே போல் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட பாய்லர் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.