வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு, அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி’ ஒரு மாநிலத்தின் முதல்வரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும். பாஜகவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி, வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதாவது 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.

ஸ்டாலின்

இவ்வாறான நிலையில் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்குப் பதிலாக, ‘நான் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு – நானும், எனது அமைச்சரவை சகாக்களும், ஏற்கனவே செய்த, இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற, இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள ஊழல்களில் இருந்து தப்பிக்க, பாஜகவின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்’ என்று தமிழக விவசாயப் பெருமக்களிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.

‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’, ‘விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம்’, ‘விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்’ ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து – தனது மேஜையில் வைத்துக் கொண்டு – ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு, முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் – யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, ‘விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக’க் கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின் உச்சக்கட்டம்!

பஞ்சாப் எதிர்ப்பது, சந்தைக்கட்டணம் உள்ளிட்ட கட்டண வருவாய் பாதிப்பதால் என்று கூறும் முதல்வர், இவரே கூறுகின்ற அம்மா ஆட்சியின் ‘தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள்’ சட்டம் மற்றும் வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வசூல் செய்யப்படும் கட்டண வருவாய் குறித்து ஏன் கவலைப்படவில்லை? தமிழ்நாட்டிற்கும் நிதி இழப்பு ஏற்படும் என்று ஏன் வாதிடவில்லை? ஆகவே இதுவும், சட்டத்தை ஆதரித்து விட்டு – இப்போது விவசாயிகளின் எதிர்ப்பு வந்ததும் தப்பிக்க முயற்சித்து – முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல், விழி பிதுங்கி, திணறி நிற்கும் வாதம்.

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து – உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 6 லட்சம் போலிகளைச் சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் – இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் – விவசாயிகள் விரோத மத்திய பாஜக அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது.

ஆயிரம் முறை ‘விவசாயி’ என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இந்த காவிரிக் காப்பாளர் அல்ல; ‘காவிரி ஏய்ப்பாளர்’ போடும் ‘கபட நாடகம்’, இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து ‘பாஜகவின் பாதுகாப்பு’ வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.

முதலமைச்சரின் நேற்றைய 6 பக்க ‘ஆதரவு அறிக்கையை’ நிராகரிக்கும் வகையில் – இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். ‘மக்களவையில் ஆதரவு’ ‘மாநிலங்களவையில் எதிர்ப்பு’ என்ற அதிமுகவின் நகைச்சுவைக்குப் பிறகு – இப்போது முதல்வரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி.

‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்’ என்று, ‘ஒப்புதல் வாக்குமூலம்’ அளித்து – விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்! அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு! தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்” என்று” குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்...பிரதமர் ட்வீட்!

Sun Sep 20 , 2020
வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு […]
விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்...பிரதமர் ட்வீட்!

You May Like