தோனி மற்றும் சாக்ஷி இன்று தங்கள் 10-ம் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி, டேராடூனில் தோனி – சாக்ஷி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாமல், ரகசியமாக திருமணம் நடைபெற்றதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆப்ரஹாம், பிபாஷா பாசு, தோனியில் இந்திய நண்பர்கள் என வெகு சிலர் மட்டும் அவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
தோனியும், சாக்ஷியும் குழந்தைப் பருவ நண்பர்கள் என்றாலும், வளரும் வரை அவர்கள் காதலிக்க தொடங்கவில்லை. தோனி – சாக்ஷ் இருவரின் தந்தையும் ராஞ்சியில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்.
இருவரும் குடும்பத்தினரும் நல்லுறவை கொண்டிருந்த நிலையில், தோனி, சாக்ஷி இருவரும் ஒரே பள்ளியில் பயின்றனர். 2007-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலில் சந்திக்கும் வரை, அவர்கள் தொடர்பில் இல்லை. அதன்பின்னரே அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டர். 2015-ம் பிப்ரவரி 6-வது இவர்களுக்கு ஸிவா என்ற பெண்குழந்தை பிறந்தது.

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த திருமணநாளை ராஞ்சியில் உள்ள பார்ம் ஹவுசில் அவர்கள் கொண்டாட உள்ளனர். தோனியின் ரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் திருமணம் எப்படி ஒட்டுமொத்த நாட்டிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.