“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..!

100 – 200 முறை துப்பாக்கி சூடு நடத்திய இந்திய, சீன வீரர்கள்.. எச்சரிக்கும் நடவடிக்கை என ராணுவ வட்டாரங்கள் தகவல்

இந்திய மற்றும் சீன வீரர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் பங்கோங் ஏரியின் வடக்குக் கரையில் 100-200 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய

இந்திய – சீன எல்லையான லடாக்கில் கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அதன்பிறகு சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருவதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்திய மற்றும் சீன வீரர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் பங்கோங் ஏரியின் வடக்குக் கரையில் 100-200 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன வீரர்களுக்கு தெரியாமல் ஒரு ராணுவ நிலையை நிறுவ இந்திய வீரர்கள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தற்போது லடகா எல்லையில் ஃபிங்கர் 3-4 க்கு அருகில் உள்ள பகுதிகளை இந்தியா தன் வசம் கொண்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது சீன பிரதிநிதி வாங் யி ஆகியோர் செப்டம்பர் 10 அன்று மாஸ்கோவில் சந்தித்து லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் பதட்டங்களைத் தணிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது.

சீனா

அந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் ஒரு ஐந்து அம்சத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், “எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை தொடரவும், விரைவாக படைகளை விலக்கி கொள்ளவும், சரியான தூரத்தை பராமரிக்கவும், பதட்டங்களைத் தணிக்கவும், புதிய நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆகிய அம்சங்கள் அந்த உடன்பாட்டில் இடம்பெற்றிருந்தன.

கடந்த வாரம் நடந்த மற்றொரு சம்பவத்தில், லடாக்கின் பங்கோங் ஏரியின் தென் கரையில் இந்திய நிலைகளை அணுக சீனா முயன்றது. அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்திய ராணுவத்தினர் சமீபத்தில் லடாக் எல்லையில் உயரமான இடங்களை ஆக்கிரமித்ததன் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணிக்க முடிந்தது. எல்லை கட்டுப்பாடு பகுதியை ஒரு தலைப்பட்சமாக மாற்றுவதற்கான சீன முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. தற்போது இந்தியா வசப்படுத்தியுள்ள உயரமான பகுதிகளுக்கு செல்ல சீன இராணுவம் மேற்கொண்ட பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைககளுக்குப் பின்னர் இந்திய ராணுவம் தொடர்ந்து அப்பகுதியில் ராணுவத்தை நிலைநிறுத்தி உள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser1

Next Post

வீட்டுக் கடன், வாகனக் கடன்களின் வட்டி மேலும் குறைய வாய்ப்பு.. வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு..

Wed Sep 16 , 2020
அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (ரிசர்வ் வங்கி) கடன் வாங்குகின்றன. அவை ‘ரெப்போ வீதம்’ என்று அழைக்கப்படுகின்றன. இது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியால் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படலாம். இந்த ரெப்போ வீதத்தின் அடிப்படையில், வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை நிர்ணயிக்கின்றன. வீட்டுக் கடன்களுக்கான மிதக்கும் வட்டி விகிதங்கள் இந்த ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தற்போது, கடன் அடிப்படையிலான விகிதத்தில் (Marginal Cost […]
வீட்டுக் கடன்

You May Like