ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான 10,402 காலிப்பணியிடங்கள்…!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான 10,402 காலிப்பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் திரு அருண் ஹல்தார் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில் அதிகபட்சமாக 6841 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், எரிசக்தித்துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ். ஜவஹர் உறுதி அளித்திருப்பதாகவும் அருண் ஹல்தார் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கு எதிரான 13 சம்பவங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் 10 சம்பவங்களுக்கு சுமூகதீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறினார். மற்ற 3 சம்பவங்கள் தொடர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Vignesh

Next Post

”இது என்னடா புது உருட்டா இருக்கு”..!! பணம் வந்துருச்சு ஓவர் ஓவர்..!! கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த 4 பெண்கள்..!!

Fri Feb 10 , 2023
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். முதலில் ரூ.50 ஆயிரம் தரப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். அதை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு, அடுத்த தவணையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதன் பின்னர் கடைசி தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். […]

You May Like