10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்திய கடலோர காவல்படையில் வேலை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடலோரக் காவல்படையில் 255 நாவிக் (பொதுப் பணி மற்றும் உள்நாட்டுக் கிளை) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்று தொடங்குகிறது. இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 16, 2023 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் joinindiancoastguard.cdac.in என்ற இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு : காலியிட விவரங்கள்:

  • நாவிக் (பொதுப் பணி): 225 பணியிடங்கள்
  • நாவிக் (உள்நாட்டு கிளை): 30 பணியிடங்கள்

கல்வித் தகுதி : நாவிக் பொது பணி காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 10 மற்றும்+ 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாவிக் (உள்நாட்டு கிளை) காலியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிலை I, நிலை II, நிலை III மற்றும் நிலை IV ஆகியவற்றில் அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் அனைத்திந்திய அளவிலான தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..

மேலும் விவரங்களுக்கு இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு இதோ.. https://joinindiancoastguard.gov.in/sailorentry.html

Maha

Next Post

மாதம் ரூ.9000 வருமானம் கிடைக்கும்.. தபால் அலுலகத்தின் இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா..?

Mon Feb 6 , 2023
தபால் அலுவலகத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அவை நம்பகமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் மொத்த முதலீட்டு திட்டங்களையும் வழங்குகிறது.. அதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme- MIS). இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மொத்தத் தொகையை முதலீடு செய்து, அதற்கான வட்டி தொகையை மாத வருமானமாக […]

You May Like