நைஜீரியாவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 110 விவசாயிகளை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போர்னோ ஸ்டேட் பகுதி அருகே தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசோப் என்ற கிராமத்தில் விவசாயிகள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போகோஹரம் தீவிரவாதிகள் பல நாச வேலைகளை செய்துள்ளனர். அங்குள்ள விவசாயிகளை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் 110 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரது உடலும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தபட்டது.
மேலும் பல பெண்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். பல ஆண்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்கள். இந்த ஆண்டில் நைஜீரியாவில் நடைபெற்ற அதி பயங்கர தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் நடந்ததாக ஐ.நா அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கெல்லன் உறுதிப்படுத்தியுள்ளார்.