12 மணி நேரம் தண்ணீரில் இருந்த நடிகை…. சவாலாக இருந்தது – நடிகை மனிஷா கொய்ராலா…

முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா.  புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தொடரில் பாலியல் தொழில் செய்யும் மல்லிகாஜான் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். இந்தியாவின் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் லாகூர் ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு பகுதி நிகழ்ச்சியின் பின்னணியாகும். பிரிட்டிஷ் ராஜ் சகாப்தத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தால் பாலியல் தொழிலாளிகளும் நவாப்புகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதே இந்த தொடரின் கதை.

இந்த தொடரில், சோனாக்ஷி சின்ஹா , அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடரில் நடித்தது குறித்து மனிஷா கொய்ராலா சில தகவல்களை தெரிவித்துள்ளார். ‘ஹீரமண்டியில் அந்த ஒரு காட்சியில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அந்த காட்சிக்காக நான் 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன். தண்ணீர் சுத்தமாகவும் சூடாகவும் இருப்பதை இயக்குனர் உறுதிசெய்திருந்தாலும் சில மணி நேரத்தில் சேறும் சகதியுமாக மாறியது என்றார். மேலும்,  இந்த காட்சியை எடுத்தபின் மிகவும் சோர்வடைந்தேன். எனக்கு அது மன அழுத்தத்தை கொடுத்தாலும் இதயபூர்வமாக சந்தோஷத்தை கொடுத்தது’, என்று கூறியுள்ளார்.

150 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் TVS… ஐகியூப் டாப் எண்ட் வேரியண்ட் அறிமுகம்….

shyamala

Next Post

ஒருமுறை முதலீடு..!! லட்சங்களில் லாபம்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Wed May 15 , 2024
இது பெண்களுக்காக தபால் துறை கொண்டு வந்த திட்டம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டில் அறிவித்தார். இத்திட்டம் ஏப்ரல் 1, 2023 அன்று தொடங்கியது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் இந்த திட்டத்தில் இணைந்து டெல்லி சன்சாத் மார்க்கில் உள்ள தபால் நிலையத்தில் பணத்தை முதலீடு செய்தார். இத்திட்டத்தின் பெயர் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) திட்டம். இதில், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை […]

You May Like