சிறுமியின் தலையை நரபலிக்கு பயன்படுத்தினார்களா.? செங்கல்பட்டில் அதிர்ச்சி.!

பள்ளி மாணவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், மாணவியின் தலை காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதைப் பார்த்த ஊர் பொது மக்கள் இச்செய்தியை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து போலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவாடி கிராமத்தைச் சோந்தவர் பாண்டியன். இவரின் 12 வயதான மகள் கிருத்திகா, மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவுரிமேடு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுற்கு கிருத்திகா வந்திருந்தார் .

அங்கே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சாலையோரம் நின்றிருந்த மின்கம்பம் ஒன்று அச்சிறுமியின் மீது விழுந்ததில் கிருத்திகா பலத்த காயம் அடைந்தார். அவரை பெற்றோா் மீட்டு சென்னை எழும்பூா் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

இதனையடுத்து , கிருத்திகா சென்ற வாரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இதனால், உறவினா்களும், கிராம மக்களும் இந்த சம்பவம் குறித்து சித்திரவாடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் இவர்களின் கோரிக்கை ஏற்று மின்வாரியம் மூலம் இழப்பீடுத் தொகை வழங்குவதாக கூறி, சிறுமியுன் உடலை உடல்கூறு செய்து புதைக்கப்பட்டது. ஊர் பொது மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து, மீண்டும் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளதால் மாந்திரீக வேலைக்காக, இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Baskar

Next Post

ரம்மி தடையால்.. மன உளைச்சல்.! பெற்றோரை தவிக்கவிட்டு மகன் எடுத்த சோக முடிவு.!

Thu Oct 27 , 2022
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய […]

You May Like