இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

கிரகணமும் – 12 ராசிக்காரர்கள் செய்யவேண்டிய பரிகாரங்களும்

சூரிய கிரகணம் நிகழும் நாளில் தனுசு ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்கிறது. இதனால் எந்த ராசிக்கு என்ன பாதிப்பு ஏற்படும். எந்த ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும். செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன பார்க்கலாம்.


மேஷம்

astro mesham 1 1576564873 1

மேஷ ராசிக்காரர்களே 27ஆம் தேதி வரை கிரகங்கள் இணைந்துள்ளதால் நிதானத்தை கடைபிடியுங்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். குடும்பத்தில் அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். 3 நாட்களும் தொடர்ந்து அகல் விளக்கு வாங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

ரிஷபம்

astro rishabam 11 1575301226

ரிஷபம் ராசிக்காரர்களே தந்தையின் உடல் நலத்திலும், உங்கள் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். இளைய சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். முக்கிய வாக்குறுதிகளை தவிர்த்து விடுங்கள். புதிய முயற்சிகளை தொடங்க வேண்டாம். அம்பாளை நினைத்து வணங்குங்கள். பாதிப்புகள் நீங்கும்.

மிதுனம்

astro mithuman 1566286086

மிதுனம் ராசிக்காரர்களே நிதானம் தேவை. கண்டச்சனி காலம் என்பதால இரவு நேரங்களில் வீண் பயணங்களை தவிர்த்து விடுங்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியம், தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குளிக்கும் போது கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குளிங்க. விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்குங்கள் பாதிப்புகள் குறையும்.

கடகம்

astro kadagam 1574317004

கடக ராசிக்காரர்களே ஆறாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால். கணவன் மனைவி பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் போது நிதானமம் தேவை. மூத்த சகோதரரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். துர்க்கையம்மனை மனதார வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கும். துர்க்கா ஸ்தோத்திரங்களை சொல்லுங்க.

சிம்மம்

astro simmam 1 2 1574401554

சிம்ம ராசிக்காரர்களே ஐந்தாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. குடும்பம், வேலையில் முக்கிய முடிவுகளை தவிர்த்து விடுங்கள், வேலை மாற்றம் பற்றி எந்த முடிவும் எடுக்கவேண்டாம். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் நேரம். இரவு நேரத்தில் வெளியே வண்டி வாகனங்களில் வெளியே சுற்ற வேண்டாம். அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டால் எண்ணங்கள் நிறைவேறும். உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி

astro kanni 2 155 1574699293

கன்னி ராசிக்காரர்களே நான்காம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண முதலீடுகளில் முக்கிய கவனம் தேவை. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான பேச்சுக்களில் அக்கறை காட்டுங்கள். முருகப்பெருமானை வணங்குங்கள் நல்லதே நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

00 2

துலாம் ராசிக்காரர்களே மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் இணைந்துள்ளன. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் நடத்துபவர்கள் முக்கிய முதலீடுகள் வேண்டாம். இந்த 3 நாட்கள் நீங்க தகவல் தொடர்பு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். பயணங்களில் நிதானம் தேவை. மகாவிஷ்ணுவை மனதார நினையுங்கள். சயனகோல பெருமாளை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

01 9

விருச்சிக ராசிக்காரர்களே 2ஆம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால் மறைமுக எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று நாட்கள் குடும்பதோட எங்கும் வெளியில் செல்லவேண்டாம். புதிய முயற்சிகள் எடுக்கவேண்டாம். வாக்கில் நிதானம் தேவை. பயப்பட வேண்டாம் கடவுள் அருள் கண்டிப்பாக உண்டு.

தனுசு

astro dhanusu 15 155 1575338920

தனுசு ராசிக்காரர்களே உங்க ராசியில்தான் ஆறு கிரகங்கள் இணைந்து இருக்கின்றன. நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகவேண்டாம். எந்த முக்கிய முடிவும் எடுக்கவேண்டாம். வீட்டில் அமைதியாக தியானம் பண்ணுவது நல்லது.

மகரம்

astro makaram 1575431222

மகர ராசிக்காரர்கள் வெளிநாடு பயணம், வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள். வேகம் வேண்டாம் நிதானமாக இருங்க. கர்ப்பிணிகள் எச்சரிக்கையா இருக்கவேண்டும். உங்க குடும்பத்தினரோடு சண்டை சச்சரவுகள் வேண்டாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது. குழந்தைகள் மீது அக்கறை காட்டுங்கள். நீங்க நீண்ட நாட்களாக விருப்படும் விசயங்களை மனதார வேண்டிக்கொள்ளுங்கள் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும்.

கும்பம்

02 7

கும்ப ராசிக்காரர்களே லாப ஸ்தானத்தில் ஆறு கிரங்கள் இணைந்துள்ளன. அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சொத்துக்கள் எதையும் வாங்கவோ, விற்கவோ வேண்டாம். தாய்மாமனுடன் எந்த கொடுக்கல் வாங்கல் வேண்டாம். கிரகங்கள் லாப ஸ்தானத்தில் நின்று ஐந்தாம் வீட்டினை பார்ப்பதால் பூர்வ புண்ணிய சொத்துக்கள் சேரும். அன்னை காளிகாம்பாளை வணங்குங்கள்- 3 நாட்கள் பூஜை அறையில் அணையாத தீபம் ஏற்றி வழிபடுங்கள். 27ஆம் தேதி ஆலய தரிசனம் அவசியம் பண்ணுங்க.

மீனம்

astro meenam 1 1528105444

மீனம் ராசிக்காரர்களே 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் இணைகின்றன. உங்க தொழிலில் முதலீடு செய்வது பற்றி 3 நாள் யோசிக்காதீங்க. கடன் வாங்கவே வாங்காதீங்க. கிரகங்கள் கேதுவின் சாரத்தில் இணைந்திருக்கின்றன. இதனால் ஏற்பட பாதிப்புகள் நீங்கவே ஆலய தரிசனம் செய்ய சொல்கிறோம். உங்களுக்கு கர்ம ஸ்தானத்தில் கிரகங்கள் இணைந்துள்ளதால் வேலை தொழில் பற்றிய முக்கிய முடிவுகளை இந்த 3 நாட்கள் நீங்க எடுக்காதீங்க.

1newsnationuser3

Next Post

சூரிய கிரஹணத்தால் வருத்தமடைந்த பிரதமர் மோடி..

Thu Dec 26 , 2019
சூரிய கிரஹணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அரிய நிகழ்வாக கருதப்படும் நெருப்பு வளையத்துடன் கூடிய சூரிய கிரஹணம் இன்று காலை 8.15 மணிக்கு தொடங்கி 11.16 வரை நீடித்தது. இந்த கிரஹணம் தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றியது. சூரிய கிரஹணத்தை முன்னிட்டு சபரிமலை, திருப்பதி, பழனி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னால் சூரிய […]
download 13

You May Like