WWE தலைவர் வின்ஸ் மக்மஹோன் மிகவும் கண்டிப்பானவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தொலைக்காட்சியின் நேரலையின் போது கூட தான் சொல்ல வேண்டிய சொற்கள் குறித்து மிகவும் கவனமாக இருப்பவர்.

டேனியல் பிரையனின் ஓய்வூதிய உரையின் போது டைட்டஸ் ஓ நீல் தொலைக்காட்சி நேரலைக்காக WWE தலைவர் மக்மஹோனின் கோபத்திற்கு ஆளானார். இப்போது மக்மஹோனுக்கு மற்ற இரண்டு மல்யுத்த வீரர் மீதும் மனகசப்பு இருப்பதாக என்று தெரிகிறது.
சமீபத்தில், 14 முறை சாம்பியனான ராண்டி ஆர்டன் மற்றும் என்எக்ஸ்டி சூப்பர் ஸ்டார் டாம்மாசோ சியாம்பா இருவரும் ட்விட்டரில் சூடான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சியம்பாவின் போட்டி குறித்து ஆர்டன் கருத்துகளை பரிமாறியதால் இருவருக்கும் இடையில் பெரும் வார்த்தை போர் மூண்டது. இந்த ட்விட்டர் பதிவு விவகாரத்தில் அவர்களுடைய ரசிகர்களும் சேர்ந்து கொண்டதால் இது மக்மஹோனைக் கோபப்படுத்தியுள்ளது.
இது குறித்து பதிலளித்த பிரையன் அல்வாரெஸ், இது நிறுவனத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட விவாதம் இல்லை எனவும் இரண்டு வீரர்களுக்கு இடையில் நடந்த வார்த்தை மோதலுக்கும் நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தினால் டாம்மாசோ சியாம்பா முன்னணி பட்டியலில் இல்லை என்ற கருத்துக்கு வந்துவிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வின்ஸ் மக்மஹோன் இந்த சண்டையை வெறுப்பதாகவும் அவருக்கு இந்த இரு நபர்களுக்கு இடையே ஏற்ப்படும் கேலி கிண்டல் விளையாட்டை பாதிப்பது கோவத்தை தூண்டுவதாகவும் பிரையன் அல்வாரெஸ் தெரிவித்துள்ளார். WWE பகைமையுடன் முன்னேறுகிறதா அல்லது ரசிகர்களுக்கு இது ஒரு சுவராசியமான போட்டியாக இருக்கப்போகிறதா என்பது வரும்காலங்களில் தான் புரியவரும்.