அடக்கொடுமையே.! 17 வயது மகளை கர்ப்பமாக்கிய சித்தப்பா..!! போக்சோவில் கைது செய்த போலீஸ்.!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய வழக்கில் சித்தப்பா கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 17 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் திருத்தணி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் கருப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிறுமி ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து ஆந்திரா விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற பாலாஜி என்ற நபரையும் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பாலாஜி சிறுமிக்கு சித்தப்பா உறவுமுறை என்பது தெரிய வந்திருக்கிறது.

திருப்பத்தூர் விகே கண்டிகை பகுதியில் வசித்து வரும் பாலாஜி சிறுமியை காதலிப்பதாக கூறி அவரை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாலாஜியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தப்பா முறை உறவினரே சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

"இஸ்லாமிய மதச் சட்டங்களை மீறி திருமணம்.." முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பிபி-க்கு '7' ஆண்டுகள் சிறை தண்டனை..!!

Sat Feb 3 , 2024
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். நாட்டின் முக்கிய தகவல்களை கசிய விட்டதாக 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு நாட்டுத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசு பொருட்கள் தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இஸ்லாமிய விதிமுறைகளை மீறி திருமணம் […]

You May Like