பிளஸ் டூ மாணவியின் கள்ளக்காதலை பெற்றோர்கள் கண்டித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலனும் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கொங்கன்சேருவு பகுதியை சேர்ந்தவர் சௌமியா(17). இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். அதே ஊரில் சிலம்பரசன் (27) கூலி தொழில் செய்து வந்தார். சிலம்பரசன் என்பவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் சௌமியாவிற்கும் சிலம்பரசனுக்கும் கடந்த சில நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

கடந்த 7 தேதி இரவு 10 மணிக்கு சிலம்பரசன் சௌமியாவை கடத்திச் சென்றுள்ளார். இருவரும் ஒரு நாள் இரவு முழுவதும் தனிமையில் இருந்து விட்டு மறு நாள் எட்டாம் தேதி காலை சௌமியா வீடு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌமியாவின் பெற்றோர் அவளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சௌமியா அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவளை காப்பாற்றி அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சௌமியா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு தொடர்ந்த போலீசார் சௌமியாவின் இறப்பிற்கு காரணமான சிலம்பரசனை தேடி வந்தனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட மாணவி சௌமியாவை எரித்த இடத்திலேயே சிலம்பரசன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.