மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

சாத்தன்குளம் காவலர்களுக்கு எதிராக மேலும் இருவர் புகார்..! அதிர வைக்கும் உண்மைகள்..!

தூத்துக்குடி சாத்தன்குளம் வியாபாரிகளை விசாரணையில் அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மீது மேலும் இருவர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணையின் பெயரில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் பால்துரை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாத்தான்குளம் அழகுராஜ் என்பவரையும் தாக்கியதாக எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது எட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் பேய்க்குளத்தை சேர்ந்த மகேந்திரன் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்ததாக அவரின் தாய் வடிவு வழக்கு தொடர்ந்ததை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த வழக்கை டிஎஸ்பி அனில்குமார் விசாரித்து வருகிறார்.

தற்போது மேலும் இருவர் சாத்தான்குளம் காவலர்கள் மீது கடந்த 28ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தன்குளம் அருகே ஆசிர்வாதபுரத்தை சேர்ந்தவர் யாக்கோபுராஜ். இவர் அளித்துள்ள புகாரில், “நான் பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறேன். கடந்த 23.5.2020 அன்று மாலை 7 மணி அளவில் மீரான்குளம் பேருந்து நிலையம் அருகே நான் நின்று கொண்டு இருக்கையில் எஸ்.ஐ. ரகுகணேஷ் விசாரணை என கூறி வலுகட்டாயமாக என்னை காரில் ஏற்றினார். அங்கிருந்து என்னை பழனியாபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று 10 பேர் கொன்ற குழு என்னை தாக்கினர். பின்னர் 10 மணி அளவில் சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டு சென்று அங்கு சரமாரியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் தாக்கினர்.

பின்னர் எனக்கு யார் என்றே தெரியாத மகேந்திரன் என்பவர் என்மீது புகார் கொடுத்துள்ளதாக கூறி கோவில் பட்டி சிறையில் அடைத்தனர். என்மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பின்பு போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மகேந்திரன் என்பவரது மாமா தங்கவேல் அளித்துள்ள புகாரில், ” கடந்த 23.5.2020 அன்று அதிகாலை என் வீட்டில் கதைவை உடைத்து கொண்டு உள்ளே வந்த எஸ்.ஐ ரகுகணேஷ் மற்றும் சில நபர்கள் என்னை இழுத்து சென்று காரில் ஏற்றினர். அதில் என் மருமகன் மகேந்திரனும் இருந்தார். அடுத்த நாள் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் இருந்தோம். அங்கு மகேந்திரனும் மற்றும் சிலரும் தாக்கப்பட்டனர். எனது அருகே மீரான்குளம் யாக்கோபுராஜ் போலீஸ் தாக்கியதில் சுயநினைவு இன்றி கிடந்தார். பின்பு எங்களிடம் வெள்ளை தாளில் கையெழுத்து பெற்றுக் கொண்டு விடுவித்தனர்.

அந்த வெள்ளைத்தாளில் எங்களுக்கு யார் என்றே தெரியாத யாக்கோபுராஜ் எங்களை பணம் கேட்டு மிரட்டியதாக நாங்கள் புகார் கொடுத்தது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது தற்போது தான் தெரியவந்தது. இது குறித்து போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார்களை பெற்ற எஸ்பி ஜெயகுமார் இது குறித்து விசாரணை நடத்த ஏடிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து சாத்தன்குளம் போலீசார் மீது புகார்கள் வந்த வண்ணம் இருப்பது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

மோதி பார்க்க தயாரா..? வம்பிழுக்கும் ஏஜே ஸ்டைல்ஸ்..? மீண்டும் வருகிறார் அண்டர்டேக்கர்..?

Sat Aug 1 , 2020
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் பரபரப்பாக நடக்கிறது WWE. கடந்த ஏப்ரல் மாதம் இருகட்டமாக நடைபெற்ற ரெஸ்ஸில்மேனியா தொடரில் மிகவும் சுவாரசியமான பகுதியாக அமைந்த அண்டர்டேக்கர் – ஏஜே ஸ்டைல்ஸ் இடையேயான போனியார்ட் போட்டியை யாரும் மறக்க முடியாது. அதில் ஒரு சிறப்பம்சமாக ரிங்கில் போட்டி நடைபெறமால் வெளிப் பகுதியில் சண்டை நடைபெற்றது. அதனுடன் பின்புற இசை அமைத்தால் அது ஒரு திரைப்படத்தின் சண்டை காட்சியை போலவே இருக்கும். அந்த […]
39a3cb124f870f479911cb0c84858851 crop north

You May Like