தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..!

டெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பிய 2 செய்தி சேனல்களுக்கு தடை.. எதிர்ப்புக்கள் வலுத்ததால் பின்வாங்கிய மத்திய அரசு..

டெல்லி வன்முறை குறித்து நேரலையில் செய்தி ஒளிபரப்பிய 2 மலையாள செய்தி சேனல்களின் ஒளிபரப்புக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால் தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

asianet media one

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் ஆகிய செய்தி சேனல்கள், கேபிஸ் டிவி நெட்வொர்க் விதிமுறைகளை மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு எதிராக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் டெல்லி வன்முறையை, ‘வகுப்புவாத வன்முறை’என்று குறிப்பிட்டதாகவும், மேலும் அந்த சேனலின் நெறியாளர், அந்த வன்முறைக்கு மத்திய அரசு அமைதியாக ஒப்புதல் அளித்ததாகவும் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ஒளிபரப்பான செய்திகளை மத்திய அமைச்சகம ஆய்வு செய்ததாகவும், அன்றைய தின ஒளிபரப்பில், சாலையில் செல்லும் மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்பு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்தி வெளியிட்டனர் என்று தெரிவிக்கப்படுள்ளது.

முஸ்லீம்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர், மத்திய அரசு வன்முறையை ஒரு சில மணி நேரத்தில் கட்டுப்படுத்தி இருக்கலாம், ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை போன்ற கருத்துகள் ஒளிப்பரப்பானது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

delhi riots

அதேபோல் மீடியா ஒன் சேனலுக்கு எதிராக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களிடம் கடுமையான அணுகுமுறையை டெல்லி காவல்துறை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜாஃப்ராபாத்தில் நடைபெற்ற வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் செய்தி ஒளிபரப்பியதாகவும் கூறியுள்ளது.

மேலும் வன்முறையாளர்கள் கடைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட போதும் டெல்லி போலீஸ் எந்த நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்ததாகவும் மீடியா ஒன் செய்தி வெளியிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நேற்று மாலை 7.30 மணி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஏசியாநெட், மீடியா ஒன் ஆகிய சேனல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

delhi riots

இந்த நோட்டீஸுக்கு இரண்டு சேனல்களும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தடை உத்தரவை வாபஸ் பெற்றது. எனவே ஏசியா நெட், மீடியா ஒன் ஆகிய சேனல்கள் இன்று காலை மீண்டும் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

1newsnationuser1

Next Post

மதுபோதையில் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்...அடித்து உதைத்த கிராம மக்கள்...

Sat Mar 7 , 2020
வீட்டில் பாடம் எடுப்பதாக கூறி மதுபோதையில் படிக்க வந்த மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை கிராம மக்கள் செருப்பால் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் கோபால்பேட்டா மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டில் பயிற்சி அளிப்பதாக கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கர்ணூல் மாவட்டம் தேலகப்பள்ளி மண்டலம் பெத்தாபுரத்தை சேர்ந்த சரத் என்பவர் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளார். அதிகாலை […]
telungana rape attempt

You May Like