கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்.. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. ஐபிஎல்….முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை வெற்றிபெறுமா? கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு! தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்…காரணம் இதுதான்! 5வது லீக் போட்டி…வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துமா மும்பை அணி! ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா? மனிதனை விழுங்கும் ராட்சத எலி?…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்! சொந்த வீடு வாங்கணுமா..? உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் ரூ. 1500 இருந்தால் போதும்.. புதிய வீட்டுக் கடன் திட்டம்.. அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…நீயா, நானா என மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் வேட்பாளர்கள்! எனக்கே அது நடந்திருக்கு..! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! பள்ளிக் கல்வித்துறையின் திடீர் உத்தரவு.. அனைத்து பள்ளிகளும் இந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.. CM பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கம்? உண்மைக்கு புறம்பான தகவல்! இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்க யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..! அறுவடை செய்த விவசாயி மகிழ்ச்சி..! சானிட்டைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்த சிறுவன்..! டிவியில் விரிசல் விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை..! 50 பெண்களை கதறவிட்ட டிக்கிலோனா டிக்கிமணி..! கள்ளக் காதலன்களை விரட்டிவிட்டு காதலிகளுடன் உல்லாசம்..! இவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா!

#BREAKINGNEWS: சீனா அத்துமீறி தாக்கியதல் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு – ஏ.என்.ஐ

லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்திருப்பதாகவும், சீன தரப்பில் 43 பேர் வரை பலி, படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

gallerye 132855955 2558915

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரிப்பகுதி ஆகிய எல்லைப்பகுதிகளில் இந்திய, சீன துருப்புக்கள் குவிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்த நிலையில், அதை தணிக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை அடுத்து அங்கிருந்து சீன படைகள் பல கிலோமீட்டர் தூரம் பின்வாங்கியதாகவும், இந்திய துருப்புகள் வழக்கமான ரோந்துப்பணிகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கால்வான் பள்ளத்தாக்கு எல்லையில் இருதரப்பு படைகளும் அமைத்திருந்த தற்காலிக தங்குமிடங்களை நேற்று மாலை அகற்றும் பணி நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையை மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அது வலுத்த நிலையில் இரு தரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கைகள், கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், ஜவான்கள் இரண்டு பேரும் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், சீன தரப்பில் 4 பேரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

202006161319379847 Army Officer 2 Soldiers Killed In Violent FaceOff With SECVPF 1

இநிலையில், மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறி ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுவதாக, ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

அதே போன்று சீன தரப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை, 43 பேர் வரையில் இருக்கக்கூடும் எனக் கூறப்படுவதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் இந்திய ராணுவம் தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

சென்னை மெட்ரோவில் வேலை வேலைவாய்ப்பு....

Wed Jun 17 , 2020
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 13 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 9ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். வேலையின் விவரம்:பணி : Chief General Manager (Electrical) – 1Post Cheif Vigilance Officer – 1Director ( Finance) – 1DGM / JGM / AGM ( Civil) – 2DGM / JGM / AGM (Design) – 4DGM / […]
banner

You May Like