தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

2019 புல்வாமா தாக்குதலை திட்டமிட்ட ஜெயிஷ் இ தீவிரவாதி சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினரின் அதிரடி என்கவுண்டர்..

2019 புல்வாமா தாக்குதலை திட்டமிட்ட ஜெயிஷ் இ தீவிரவாதி உட்பட 3 ஜெயிஷ் இ தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜெயிஷ் இ

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை, ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் கூட்டாக இணைந்து, தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சூடு நடத்தினர். உளவுத்துறை கொடுத்த தகவல்களின் படி, இன்று அதிகாலை பாதுகாப்பு படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர், அவர்களை சரணடையுமாறு அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 ஜெயிஷ் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2019 புல்வாமா தாக்குதலை ஒருங்கிணைத்த ஃபாஜி பையோர் லம்பூ என்ற பாகிஸ்தான் தீவிரவாதியும் கொல்லப்பட்டார். கடந்த வாரம் புல்வாமாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஇடி வெடிப் பொருட்கள் நிரம்பிய காரை வெடிகுண்டு நிபுணர்கள் அழித்தனர், இன்று பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட ஃபௌஜி என்ற இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

encounter

இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி “ இன்று புல்வாமாவில் கொல்லப்பட்ட 3 ஜெயிஷ் இ தீவிரவாதிகளில், ஃபாஜி பையோர் லம்பூ என்ற தீவிரவாதியும் ஒருவர். அவர் அந்த இயக்க தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஆவார். மேலும் ஐஇடி வெடிபொருள் தயாரிப்பதில் நிபுணர்.

2019 புல்வாமாவில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழக்க காரணமான தற்கொலைப் படை தாக்குதலில் அவருக்கும் தொடர்புள்ளது. அவர் பல்வேறு ஐஇடி வெடிப்பொருளை தயாரித்துள்ளார். அண்மையில் புல்வாமாவில் ஐஇடி வெடிபொருள் நிரப்பட்ட கார் அழிக்கப்பட்ட சம்பவத்திலும் அவருக்கு தொடர்புள்ளது” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

நான் எதிர்ப்பார்க்கும் தருணம்..... மனம் திறந்த WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர்....

Thu Jun 4 , 2020
WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர் சமீபத்தில் ரெஸ்டில் டாக் உடனான ஒரு நேர்காணலில் பங்கேற்றார், அங்கு அவர் எதிர்கொள்ள விரும்பும் எதிர் போட்டியாளர்களைப் பற்றி சிலவற்றை பகிர்ந்துக்கொன்டுள்ளார். ப்ராக் லெஸ்னரை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரெஸில்மேனியா 36 இல் நடந்த WWE சாம்பியன்ஷிப்பை மெக்கிண்டயர் வென்றார். அவர் யாரை எதிர்கொள்ள விரும்பவில்லை, யாருடன் வளையத்தில் இருக்க விரும்புகிறார் என்று மெக்கின்டைரிடம் கேட்கப்பட்டது. ஸ்காட்டிஷ் மனநோயாளி ஏ.ஜே. ஸ்டைல்சை தனது பட்டியலில் முதலிடத்தில் […]
32f74 15809251312353 500

You May Like