சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015…

பல்லாவரம் நகராட்சி பகுதியில் 23 சாலைகளுக்கு சீல்… கொரோனா தடுப்பு நடவடிக்கை…

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி பகுதியில் 23 சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மேலும் பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

chennai seal

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவின்படி தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நகராட்சி, சுகாதாரம், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தன்னார்வலர்கள் இணைந்து சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வசித்த பகுதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு நோய் தொற்று பரவல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், பல்லாவரம் நகராட்சி பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் நோய் தொற்று பரவல் காக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தீவிர துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் அஸ்தினாபுரம் பகுதியில் 6 சாலைகளும், குரோம்பேட்டை சாந்திநகர் பகுதிகளில் 4 சாலைகளும், பல்லாவரம் காமராஜ் நகர் பகுதியில் 4 சாலைகளும், பல்லாவரம் துரைகண்ணு சாலை மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள அசன்பாஷா சாலை உள்பட 9 சாலைகளும் என 23 சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல தாம்பரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க காக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் தெருக்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம். வாகனங்களும் அந்த பகுதிகளுக்கு சென்று வருகின்றன. பணம் தேவைப்படுவோர் சமூக விலகலை பின்பற்றி இடைவெளிவிட்டு நின்று அந்த வாகனத்தில் பணம் எடுத்து செல்கின்றனர். மேலும், நகராட்சி சார்பில் காய்கறி வினியோகமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

ஒரு பக்கமாக பேசுவது தான் பத்திரிகை தர்மமா..? கமல் கடிதத்தை விமர்சித்த ரங்கராஜ் பாண்டேவுக்கு ஸ்ரீ பிரியா சரமாரி கேள்வி..

Sat Apr 11 , 2020
ஒரு பத்திரிக்கையாளரான நீங்கள்‌, எப்படி கமா மற்றும்‌ முற்றுப்புள்ளி என்று எதுவும்‌ வைக்காது ஒரு பக்கமாக பேசினீர்கள்‌? அது பத்திரிகை தர்மமா? என்று ரங்கராஜ் பாண்டேவிற்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார் ஸ்ரீ பிரியா.. கொரோனா தொடர்பாக மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளே வாய் திறக்காத நிலையில், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து நடிகரும், மக்கள் […]
pandey-sripriya

You May Like