கண் முன்னே நேர்ந்த கொடூரம்.! மரத்தில் கட்டி வைக்கப்பட்ட ஆண் நண்பர்.! தரதரவென காட்டுக்குள் இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட இளம் பெண்.!

மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் 23 வயது சுற்றுலா கற்பழிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது இளம் பெண்ணின் ஆண் நண்பர் குற்றவாளிகளால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இளம்பெண்ணை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது ஆண் நண்பருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக திகா பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தங்குவதற்கு ஹோட்டல் தேடிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் இறக்கி விடுவதாக கூறி இருவரையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் ஆளில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுற்றுலா பயணிகள் இருவரிடமும் கொள்ளை அடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை மரத்தில் கட்டி வைத்து அடித்த குற்றவாளிகள், அந்தப் பெண்ணை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்களின் உதவியுடன் அந்த இளம் பெண் மற்றும் அவரது நண்பர் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இவர்களது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பணிப்பெண்ணை தாக்கிய விவகாரம்..!! திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமீன் மனு தள்ளுபடி..!! நீதிபதி அதிரடி..!!

Tue Feb 6 , 2024
வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். பின்னர், ஆந்திராவில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆண்டோ – […]

You May Like