சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் முதல் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுக்கு தடையா..? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்.. மனிதர்களை அடித்து சாப்பிட்ட கொடூரம்..! தொல்பொருள் ஆய்வில் வெளியான அதிர்ச்சி வரலாறு..! சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது..? விக்டோரியா மருத்துவர் வெளியிட்ட தகவல்.. நள்ளிரவு 12.30 மணிக்கு கோலி அனுப்பிய மெசேஜ்.. ‘மிஷன் மெல்பர்ன்’ பற்றிய தகவல்களை வெளியிட்ட இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர்

கொரோனா பாசிட்டிவான பிறகு மாயமான 277 பேர்.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேரை காணவில்லை என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

277 பேர்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பாதிப்பு எண்ணிக்கை 45,000-ஐ நெருங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் 31,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், சென்னை மாநாகராட்சியும், தமிழக அரசும் திணறி வரும் நிலையில், சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மே 23 முதல் ஜூன் 11 வரை சென்னையில் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொரோனா நோய்த் தொற்று உறுதியான 277 பேர், மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது, அவர்கள் அளித்தது முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போலியானது என்பதும் தெரியவந்துள்ளது.

கொரோனா

இதனையடுத்து இந்த போலியான முகவரி மற்றும் தொலைபேசி எண் பட்டியலை கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு காணாமல் போன 277 பேர் மூலமாக மேலும் பலருக்கு நோய்த் தொற்று பரவக்கூடும் அபாயம் உள்ளதால், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை மாநகராட்சி உள்ளது.

ஒருவேளை அவர்களை கண்டுபிடித்தாலும் கூட, அவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்கள், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதையும் கண்டறிந்து அதற்கேற்றவாறு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நோய்த் தொற்று மேலும் பரவும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அரசுக்கு, மேலும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக இந்த பிரச்சனை உருவெடுத்துள்ளது.

1newsnationuser1

Next Post

அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. 3 நாட்களுக்கு பேருந்து சேவை ரத்து..

Mon Jun 15 , 2020
திருவண்ணாமலையில் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு புதிய தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்தன. அதன்படி சிலக் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி சென்னையை தவிர்த்த மற்ற இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு […]
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர்களுக்கு சிறப்பு பேருந்து..! ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!

You May Like