“என்னடா முறைக்கிற.?” சினிமா பாணியில் வம்பிழுத்து அடித்துக் கொன்ற கொடூரம்.!

மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மும்பையின் மாடுங்கா நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை தன் அணிந்திருந்த பெல்ட் கொண்டு அடுத்து, தலையில் சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த இளைஞர் அங்கேயே நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையிலேயே உயிரிழந்துள்ளார்.

ஷாகு நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இத்துயர சம்பவம் அங்குள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Baskar

Next Post

அதிர்ச்சி..!! ரேஷன் கடைகளில் இந்த பொருளுக்கு கடும் தட்டுப்பாடு..!! என்ன காரணம்..?

Tue Oct 25 , 2022
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது ’பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. […]

You May Like