மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 34-ஆக உயர்வு..

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிகை 34-ஆக உயர்ந்துள்ளது.

trichy corona 1

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. மேலும் சுமார் 1 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்றால் சுமார் 3,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இத்தாலியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் உட்பட 31 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

corona

தமிழகத்தை சேர்ந்த ஒருவர், லடாக்கை சேர்ந்த இருவர் என புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. இதில் லடாக்கை சேர்ந்தவர்கள் ஈரானில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்த நபர் ஓமனில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் ஓமனில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் நாடு திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று காலை ஜம்மு காஷ்மீரில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் 9 மாவட்டங்களில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு வரும் 9-ம் தேதியிலிருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

பாஜக எம்.எல்.ஏ-வின் சுற்றுலா விடுதி இடிப்பு...அரசின் பழிவாங்கும் செயல்...சஞ்சய் பதக்...

Sat Mar 7 , 2020
ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக்கின் சுற்றுலா விடுதி இடித்து தள்ளப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் விஜயராகவ்கர் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராக சஞ்சய் பதக் உள்ளார். இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக்கின் சுற்றுலா விடுதி இடித்து தள்ளப்பட்டுள்ளது. பான்தவ்கர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சஞ்சய் பதக், சுற்றுலா விடுதியை கட்டியதாக மாவட்ட நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த […]
sanjay pathak house demolished

You May Like