ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த மேற்கு வங்க மாநில இளைஞர்…..! திருச்சியில் பரபரப்பு…..!

தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சிலர் எப்படி உயிரிழந்தனர்? என்று தெரியாமல் பிரேத பரிசோதனைகள் கூட அதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்படாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்பார்கள்.

அப்படி பிரேத பரிசோதனையில் கூட கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு புத்திசாலித்தனமாக கொலை செய்யும் நபர்கள் இன்றளவும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இரத்த அழுத்தத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலினை அடிப்படையாகக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும், திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் என்பதும், அவருடைய பெயர் விக்ரம் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அத்துடன் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 நபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது பதிவாகி இருந்தது. ஆகவே கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் தப்பி சென்ற கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில், நேற்று காலை சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒரு பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட முதல்வர்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

Thu Feb 9 , 2023
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு விடுதி அறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாணவியின் பிரேத […]

You May Like