திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

“3 குற்றவாளிகள்..” கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது குறித்து கேரள முதலமைச்சர் தகவல்..

யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

3 குற்றவாளிகள்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சென்ற வாரம் கர்ப்பிணி யானை ஒன்று பசியால் சுற்றித் திரிந்த யானைக்கு, அன்னாசி பழத்திற்குள் வெடியை வைத்து அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளனர். இந்த வெடி யானையின் வாயில் வெடித்ததால், யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த யானை, அங்குள்ள வெள்ளியாறு நீருக்குள்ளேயே நின்றுள்ளது. எனினும் இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சென்று யானையை மீட்பதற்குள் அது உயிரிழந்துவிட்டது. மேலும் யானையின் உடல்கூறு ஆய்வின் போதுதான் அது கர்ப்பிணி யானை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

elephant

இந்நிலையில் யானை கொல்லப்பட்ட விவாகாரத்தில் 3 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாலகாடு மாவட்டத்தில் நடந்த சோகமான சம்பவத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்துள்ளது. உங்களில் பலர் எங்களை அணுகியுள்ளனர். உங்கள் கவலை வீண் போகாது என்று உறுதியளிக்க விரும்புகிறோம். நீதி நிலைநாட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில் “ யானை கொல்லப்பட்ட விவாகாரத்தில் 3 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறை மற்றும் வனத்துறையினர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல்துறை தலைவரும், வனத்துறை மூத்த அதிகாரியும் இன்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த அனைத்து சாத்தியமான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

முகேஷ் அம்பானிக்கு கொரோனா வைரஸால் லக் அடித்தது!!!

Thu Jun 4 , 2020
ரிலையன்ஸ் நிறுவனம் இ-காமர்ஸ் திட்டத்தின் மூலம் சில்லறை வணிகத்தை தொடங்கியுள்ளது. கொரோனா நோய் பரவல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் சில முயற்சிகளால் இந்த வர்த்தகம் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. சமூக பரவலை தடுக்க தற்போது மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். ஏற்கனவே ஸோமடோ, ஸ்விகி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் தற்காலிக ஊழியர்களை பயன்படுத்தி உணவு விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் […]
Jio grocery

You May Like