பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கு 3 ஆண்டு நிதி ஆதரவு திட்டம்‌…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகின்‌ மூலம்‌ மத்திய மற்றும்‌ மாநில்‌ அரசு பங்களிப்புடன்‌ நிதி ஆதரவு திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற குழந்தையின்‌ பெற்றோர்‌ தீர்க்க முடியாத கொடிய நோயால்‌ பாதிக்கப்பட்டவர்‌, தாய்‌, தந்தை இருவரையும்‌ இழந்த குழந்தை, தந்‌தை, தாய்‌ இருவரில்‌ ஒருவர்‌ இழந்தவர்‌, மழை வாழ்‌ மக்கள்‌, வாழ்வாதாரம்‌ இன்றி வறுமையில்‌ தவிக்கும்‌ குடும்பம்‌ மற்றும்‌ சிறைசாலையில்‌ ஆயுள்‌ கைதியாக உள்ள நபர்‌ ஆகியோரின்‌ குடும்பத்தில்‌ உள்ள 18 வயதிற்கு உட்பட்ட பள்ளியில்‌ படிக்கும்‌ குழந்தைகளாக ஒருக்க வேண்டும்‌.

அக்குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள்‌ கல்வி இடைநிற்காமல்‌ தொடர்ந்து கல்வி கற்கவும்‌, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும்‌ இந்நிதி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 41 குழந்தைகளுக்கு மட்டுமே.

இத்திட்டத்தில்‌ கிராம பகுதியைச் சேர்ந்த குடும்பங்களின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ 72,000/- மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற இறந்தவரின்‌ இறப்பு சான்று, குழந்தையின்‌ படிப்பு சான்று, ஆதார்‌ கார்டு, வருமானச்சான்று,நோயால்‌ பாதிப்பு அடைந்த மருத்துவ சான்று, வங்கி கணக்கு புத்தகம்‌ ஆகிய சான்றுகளுடன்‌ கீழ்காணும்‌ முகவரில்‌ தொடர்பு கொண்டு இத்திட்டத்தில்‌ பயன்பெறலாம்.

Vignesh

Next Post

ஆண் நண்பர்களுடன் ’பர்த் டே பார்டி’..!! குளிர்பானத்தில் மயக்க மருந்து..!! கூட்டு பலாத்காரத்தால் அதிர்ச்சி..!!

Sun Oct 16 , 2022
ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புனே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த அக்.13ஆம் தேதி தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில், தனக்கு நெருக்கமான 3 ஆண் நண்பர்களையும், 2 பெண் நண்பர்களையும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தோழி என்றும் பாராமல் […]

You May Like