3115 காலியிடங்கள்..!! இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!

எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3115 காலியிடங்கள்..!! இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!

பணியின் விவரங்கள்…

நிறுவனம்: ரயில்வே வாரியம்

காலியிடங்கள்: 3115

கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் (Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.

தேர்வு முறை: 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2022

Eastern Railway Apprentice Slots விண்ணப்பம் செய்வது எப்படி? www.rrcer.com – kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், நகல் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் லாஸ் போட்டோ, கையொப்பம், 8 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வி சான்றுகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Chella

Next Post

பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பாதிப்பு..!! ஓட்டல்களை இழுத்து மூடியதால் பரபரப்பு..!!

Tue Oct 25 , 2022
பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறி மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் இயங்கி வந்த பிரியாணி கடைகளை மூடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், நகராட்சித் தலைவருமான ரவீந்திரநாத் கோஷ் கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரவீந்திரநாத் கோஷ் கூறுகையில், “பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதற்குப் பின்னணியில் மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்றாலும், பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் […]
பிரியாணி பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்..!! இனி இந்த அரிசிக்கு தடையாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

You May Like