
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருவதால், சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஐஏஎஸ் அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வணிக வரித்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் மூலம் 33 மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் விபரங்கள்:
- கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ்
- கடலூர் – ககன்தீப் சிங் பேடி
- கோவை- ஹர்மேந்தர் சிங்
- ராமநாதபுரம்- சந்திரமோகன்
- சேலம் -நசிமுதின்
- அரியலூர் – சரவணவேல்ராஜ்
- தஞ்சை- பிரதீப் யாதவ்
- திருவண்ணாமலை- தீரஜ்குமார்
- விழுப்புரம்- முருகானந்தம்
- தென்காசி- அனுஜார்ஜ்
- நீலகிரி – சுப்பிரியா சாகு
- நாமக்கல் -தயானந்த் கட்டாரியா
- தேனி – கார்த்திக்
- மதுரை – தர்மேந்திரபிரதாப் யாதவ்
- ராணிப்பேட்டை -லட்சுமி பிரியா
- தர்மபுரி – சந்தோஷ்பாபு
- திருப்பூர்- கோபால்
- வேலூர் – ராஜேஷ் லக்கானி
- கன்னியாகுமரி- ஜோதி நிர்மலா சாமி
- கரூர் – விஜயராஜ்குமார்
- திருச்சி -ரீட்டா ஹரிஷ் தாகர்
- விருதுநகர் -மதுமதி
- தூத்துக்குடி – குமார் ஜெயந்த்
- நாகப்பட்டினம் – முனியநாதன்
- சிவகங்கை – மகேசன் காசிராஜன்
- திருவாரூர் – மணிவாசன்
- நெல்லை – அபூர்வா
- பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்
- திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா
- ஈரோடு – ககர்லா உஷா
- புதுக்கோட்டை: ஷம்பு கலோலிகர்
- கள்ளக்குறிச்சி- நாகராஜன்
- திருப்பத்தூர்-ஜவஹர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் கூடுதலாக கொரோனா சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.