பொதுவாக நம் உடலில் சுரக்கும் மெலனின் என்னும் திரவம் தான் மனிதர்களுக்கு நிறத்தை கொடுக்கிறது. இந்த சுரப்பு குறையும் போது இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது.

இதனை பித்த நரை என்று சொல்வது வழக்கம். ஏனென்றால் பித்தம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதாலும் டீ, காபி பழக்கம் அதிகம் உள்ளதாலும் இளநரை ஏற்படுகிறது. இதை தவிர மனக்கவலை, அதிக யோசனை, கடின உழைப்பு, நிம்மதி இழந்த நிலை, தொடர் துக்க நிலை போன்றவற்றாலும் இளநரை உண்டாகிறது. உணவில் மிதமிஞ்சிய உவர்ப்பு, காரம் சேர்த்து கொள்வதாலும் இது வருகிறது.
இந்த இளநரையை போக்க சில டிப்ஸ் இதோ…

டிப்ஸ் 1
மூன்று கரண்டி காபி பவுடர் எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து நன்கு காய்ச்சிக்கொள்ளவும். பேஸ்ட் போன்று வந்த பிறகு இறக்கி ஆற வைத்து பின்பு தலைக்கு தடவுங்கள். முதலில் பிரவுன் கலராக மாறி பின்பு இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். இதனை மாதம் இரண்டு மூன்று முறை செய்யலாம்.

டிப்ஸ் 2
தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்ல எண்ணை ஒரு லிட்டர், நெல்லிசாறு அரை லிட்டர் சேர்ந்து காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலைக்கு தடவினால் இளநரை விரைவில் குறையும்.

டிப்ஸ் 3
ஒரு நாளைக்கு முன்பே மருதாணி இலையை நன்கு அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் வெந்தய பவுடர் இரண்டு கரண்டி சேர்த்து ஊற வைக்க வேண்டும். மறுநாள் இதனை தலையில் எல்லா முடிக்கும் படும்படி தடவி சீயக்காய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

டிப்ஸ் 4
கருவேப்பிலை சட்டினியை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இளநரை அறவே நீங்கும்.

டிப்ஸ் 5
காபி, டீ போன்ற பித்தம் நிரந்த உணவு பொருட்கள் இளநரைக்கு முதல் எதிரி. இதனை படிப்படியாக குறைத்து முற்றிலும் கைவிட வேண்டும்.