கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்ட போகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,600 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் போதிய அளவு படுக்கை வசதிகள் இல்லை என்ற சர்ச்சையும் சில நாட்களாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதானால் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை பலரும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதானால் சென்னையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,” சென்னை கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 81 மருத்துவர்கள் சிகிச்சைக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.” என கூறியுள்ளார்.