500 கோல்கள்..!! அதிரடி காட்டிய கிறிஸ்டியானா ரொனால்டோ..!! புதிய சாதனை..!!

கிளப் போட்டிகளில் மொத்தமாக 500 கோல்களுக்கு மேல் அடித்து ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ 4 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 21-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் மூலம் கிளப் ஆட்டத்தில் 500 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

இந்த ஆட்டத்தின் 40 நிமிடத்தில் 2-வது கோலை கோல் கீப்பரின் கால்களுக்கு இடையே அடித்தார். மூன்றாவது கோலை 53-வது நிமிடத்திலும் நான்காவது கோலை 61 நிமிடத்திலும் அடித்ததன் மூலம் அல்நாசர் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார் கிறிஸ்டியானா ரொனால்டோ. கிளப் போட்டிகளில் ரொனால்டோ இதுவரை ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும் அடித்துள்ளார். ஜூவென்ட்ஸ் அணிக்காக 81 கோல்களும் அல்நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

Chella

Next Post

பாட்டி வீட்டுக்கு போன 5 வயது சிறுவன்.! தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Fri Feb 10 , 2023
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அவர் மகனுடன் சென்றுள்ளார். நேற்று காலை 10 […]

You May Like