தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

நீருக்குள் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில்.. மகாநதி ஆற்றில் மீண்டும் தோன்றிய அதிசயம்..!!

நீருக்குள் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில், மகாநதி ஆற்றில் மீண்டும் தோன்றியுள்ளது.

 நீருக்குள் மூழ்கிய

1933-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால், நதி அதன் போக்கை மாற்றியதால், ஒரு கிராமும், அந்த கோயிலும் நீருக்குள் மூழ்கியது. இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையின், தொல்பொருள் ஆய்வுக்குழு ஒன்று, இந்தக் கோவிலை அண்மையில் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது. கோயிலின் கோபுரம், பகுதியாக நீரில் தென்பட்ட நிலையில் அதனை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் அனில் குமார் திர் “ இந்த கோயில் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. இது சுமார் 450 முதல் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இந்தக் கோயிலில் இருந்த சிலை வேறொரு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகாநதி பள்ளத்தாக்கை ஆவணப்படுத்தும் ஒரு திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

Nayagarh temple

எனவே நாங்கள் இந்த கோயிலைத் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலின் கோபுரம் பகுதியாக தெரிந்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து இங்கு ஆய்வு செய்தோம். விஷ்ணுவின் அவதாரமான, கோபிநாத் இக்கோயில் மூலக்கடவுள் ஆவார். கோயில் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது, நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் அதை மீண்டும் நிறுவ வேண்டும். நீருக்குள் மூழ்கிய கோயிலை நாங்கள் கண்டுபிடிப்பது இது முதன்முறையல்ல.

15-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். மேலும் இந்த கோயில் 55 – 60 அடி உயரம் கொண்டது. அப்பகுதியில் சுமார் 65 கோயில்கள் நீருக்கடியில் இருப்பதாகவும், கோபிநாத் கோயில் உயரமாக இருப்பதால், அது மட்டுமே சில ஆண்டுகளுக்கு முன்பு தென்பட்டது ” என்று தெரிவித்தார்.

download 43

இந்த கோயின் கோபுரம் 11 ஆண்டுகளுக்கு முன்பே நீரில் தென்பட்டதாகவும், அப்போதில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் இதனை தேடி வருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அமித்ஷா உடனான ஆலோசனைக்கு பிறகு தொற்று உறுதி..

Wed Jun 17 , 2020
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல் பரிசோதனையில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்த நிலையில், 2-வது பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், நேற்று முன் தினம் இரவு, அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதன மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தது. இந்நிலையில் […]
அமித்ஷா

You May Like