”530 ஏக்கரில் மைதானம், 5 லட்சம் இருக்கைகள்”..!! பல்லடத்தில் பிரம்மாண்ட மாநாடு..!! அண்ணாமலை அறிவிப்பு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”என் மண் என் மக்கள்’ 183 தொகுதிகளை கடந்துவிட்டது. பிப்ரவரி 11ஆம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். 200-வது தொகுதியாக பிப்ரவரி 11ஆம் தேதி சென்னைக்கு வருகிறோம். 234-வது தொகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு விழா நடைபெறவுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார்.

530 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய மைதானத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை அங்கே நடக்கவிருக்கிறது. 5 லட்சம் இருக்கைகள், 10 லட்சம் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பங்கேற்க இருக்கின்றனர். பிரதமர் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இது மிகப் பெரிய எழுச்சியான மாநாடாக நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கூட்டணி பேச்சுவார்த்தை கடினமான விஷயம், எளிதாக முடிக்க முடியாது. கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கூட்டணி பற்றி தெரியவரும். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார். மேலிடம் என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். கட்சிப் பணியை பார்க்க சொன்னால் அதை செய்வேன். எல்லாருக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லும் வேலையை செய்வோம். தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை” என்றார்.

1newsnationuser6

Next Post

மாணவியை வன்புணர்வு செய்த பள்ளியின் இயக்குனர் கைது.! செல்போன் முழுவதும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்.!

Mon Feb 5 , 2024
புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், கடந்த ஜனவரி 30ஆம் தேதி, 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக […]

You May Like