இந்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 55.77% என்ற பாசிடிவ் செய்தியை வெளியிட்டுள்ளது.

நாம் பெரும்பாலும் கொரோனா பாதித்த எண்ணிக்கைகளை பார்த்து பீதி அடைகிறோம். ஆனால் பாதிப்பிலிருந்து பலரும் மீண்டு வருகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஒரு நிம்மதியான செய்தி தான்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,25,282 என உயர்ந்துள்ளது. இருப்பினும் இதில் குணமடைந்தவர்கள் 2,37,195 வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,74,387 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற பாசிடிவ் செய்தியை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் அசட்டையாக இல்லாதது தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி, சமூக இடைவெளி மற்றும் முககவசம் போன்ற விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்தால் கோரோனாவிலிருந்து முழுதும் வெளியவர வாய்ப்பு உள்ளதாக பல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. வழக்கம் போல் அமெரிக்கா முதல் இடத்திலும் தொடர்ந்து பிரேசில், இங்கிலாந்து உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ என வரிசை அமைந்துள்ளது.