வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து.. முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..

அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையின் போது 2015 முதல் 2021 வரை அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்தது தெரியவந்தது.. தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58,4438,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில் காமராஜ், டாக்டர் இனியன், டாக்டர் இன்பன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு நேற்று செய்துள்ளது.. இந்த வழக்கினை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..

Maha

Next Post

பெண்களுக்கான மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...! மத்திய அரசு தகவல்...

Fri Jul 8 , 2022
மிஷன் வாத்சல்யா திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10-ம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது, அவர்களின் முழுத்திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான […]

You May Like