இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

5ஜி நெட்வொர்கால் கொரோனாவா?… செல்போன் டவர்களை எரித்த மக்கள்…

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு 5ஜி நெட்வொர்க் தான் காரணம் என்ற வதந்தி பரவியதால், பொதுமக்கள் சுமார் 20 செல்போன் டவர்களை தீவைத்து எரித்தனர்.

england 5g

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அனைத்து நாட்டு மக்களையும் நாளுக்குநாள் அழித்து வருகிறது. இதனால் பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர். இங்கிலாந்திலும் 51 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அதில் 5 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி நெட்வோர்க் சேவையை தொடங்கி உள்ள நேரத்தில், 5ஜி நெட்வொர்க் மூலம் கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிப்பதாக இங்கிலாந்தில் வதந்தி கிளம்பியதையடுத்து, செல்போன் கோபுரங்களை பொதுமக்கள் தேடி சென்று சூறையாடி வருகின்றனர். குறிப்பாக, லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் சுமார் 20 செல்போன் கோபுரங்கள் தீவைத்தும், சூறையாடியும் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் 5ஜி நெட்வொர்க் மெதுவாக செயலுக்கு வருவதால் எரிக்கப்பட்ட கோபுரங்கள் 3ஜி, 4ஜி நெட்வொர்க் உடைய கோபுரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொலைத்தொடர்பு நிறுவன என்ஜினீயர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் தாக்கி வருகின்றனர். அதனால், ஓ2 என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தங்கள் ஊழியர்கள் செல்லும் வேன்களில், முக்கிய பணி; தாக்குதல் நடத்தாதீர்கள்என்ற அடையாள அட்டையை பொருத்தி உள்ளது.

4 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடங்கிய ‘மொபைல்யுகே’ என்ற குழுமம், இத்தகைய தாக்குதல்களை தடுக்க பொதுமக்களின் உதவியை நாடி உள்ளது. தாக்குதல் நடப்பதை கண்டால், தகவல் தெரிவிக்குமாறும், கொரோனாவுடன் 5ஜி நெட்வொர்க்கை தொடர்புபடுத்துவதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரானாவை எதிர்கொள்வதில் குழம்புகிறதா தமிழக அரசு?..

Wed Apr 8 , 2020
இரும்பு, சிமெண்ட், உரம் ஆகிய தொழிற்சாலைகள் இயங்க அளித்த அனுமதியை தமிழக அரசு சிறிது நேரத்தில் திரும்ப பெற்றுள்ளது. இந்த செயல் அரசு தெளிவற்ற முடிவுகளை எடுக்கிறதோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய & மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி […]
TN assembly

You May Like