பிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..?

3 ஆவதும் பெண் குழந்தை தானா? எருக்கம்பாலை கொடுத்து கொலை செஞ்சிரு என தாயிடமே சொல்லிய மாமியார்!

ஆண்டிபட்டி அருகே ஆண் குழந்தைக்காக பிறந்து 6 நாட்களே ஆன பெண்சிசுவினை தாயே எருக்கம்பால் கொடுத்து கொலைசெய்தது விசாரணையில் அம்பலம்

child death 1 2

பெண் சிசுக்கொலைக்கும் தடுக்கவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், கடந்த “1992 முதல் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் ”துவங்கப்பட்டது. இருந்த போதும் பெண் சிசுவினை கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறிய தான் வருகிறது. இந்த வருடத்திலேயே சென்ற மாதம் உசிலம்பட்டி, தற்போது ஆண்டிப்பட்டி என பெண் சிசுவினை பெற்றோர்களே கொலை செய்தது அம்பலமாகிவருகிறது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மொட்டனூத்து கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமம் தான் ராமநாதபுரம். இக்கிராமத்தில் உள்ள ஒத்த வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி தான் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 10 மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.


ஆண் வாரிசுக்காக காத்திருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம்தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் இரண்டாம் தேதி பிறந்து 6 நாட்களேயான நிலையில் வயிற்றுப்போக்கின் காரணமாக இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். பின்பு உடலை வீட்டிற்கு அருகிலேயே சிசுவினை புதைத்துள்ளனர்.

child death 2 1


பெண் சிசுக்கொலை இறப்பில் சந்தேகம் இருப்பதாக குழந்தை நல அலுவலகத்திற்கு புகாரும் வந்துள்ளது. இதையடுத்து தேனி மாவட்ட சமூக நல அலுவலரின் உத்தரவுப்படி மொட்ட னூத்து கிராம நிர்வாக அலுவலர் தேவி கன்னியபிள்ளைபட்டி புறக்காவல் நிலையத்தில் பெண்குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்துள்ளார்.


இப்புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்சிசுக்கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் பெண் குழந்தையின் தாய் கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் பிறந்த ஆறுநாட்களேயான பெண்குழந்தையை தாய் கவிதா தனது மாமியார் செல்லம்மாவின் தூண்டுதலின் பேரில் தான்பெற்றகுழந்தையையே எருக்கம்பால் கொடுத்து கொலைசெய்தது அம்பலமானது.


இதையடுத்து ராசதானி காவல்ஆய்வாளர் பாலகுரு கவிதா மற்றும் அவரது மாமியார் செல்லம்மாளை கைதுசெய்து ராசதானி காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

“கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் பேருதவியாக இருக்கும்” நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்..

Thu Mar 19 , 2020
கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து, மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், […]
rajini n

You May Like