இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2020 தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் பலியாயினர்.


விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் மூலப்பொருட்கள் இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமா பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கியுள்ளன. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

Sivakasi PTI. jpg2

 

இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூரில் இருந்து சென்ற தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பட்டாசு ஆலைகளில் 50 பேருக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால்,30 தொழிலாளர்கள் மட்டுமே இன்று ஆலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் வருகை குறைவாக இருந்ததால் உயிர்ச் சேதமும் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதம் குறைவு...ரயில்வே எஸ்.பி...

Fri Mar 20 , 2020
கொரோனா அச்சம் காரணமாக ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இருப்பு பாதை காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். திருச்சி ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருச்சி இருப்பு பாதை காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்வே காவல் துறை சார்பிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 […]
trichy railway police

You May Like