ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

கொரோனாவில் 6 வகை அறிகுறிகள்.. எந்த அறிகுறி ஆபத்தானது..? ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..

கொரோனாவில் 6 வகை அறிகுறிகளை வகைப்படுத்தி உள்ள ஆய்வாளர்கள், எந்த அறிகுறி ஆபத்தானது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

ஆய்வாளர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில், 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் 6 வகையான தனித்துவமான இனங்களை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 6 வகைகளும் நோய்த்தொற்றின் தீவிரத்தோடு தொடர்புபட்டுள்ளன என்பதையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், நோயாளிக்கு சுவாசத்திற்கு உதவி தேவைப்படும் சிகிச்சைகள் குறித்தும், அதாவது ஆக்ஸிஜன் அல்லது வென்டிலேட்டர் சிகிச்சை போன்றவை குறித்து கிங்ஸ் கல்லூரி லண்டன் குழு கண்டறிந்துள்ளது.

coronavirus n

எந்த வகை கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் யாருக்கெல்லாம் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம் என்று கணிக்க மருத்துவர்களுக்கு இந்த கண்டுபிடிப்புகள் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் மற்றும் வாசனை இழப்பு ஆகியவை பொதுவாக நோயின் மூன்று முக்கிய அறிகுறிகளாக இருந்தாலும் தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல், பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் சில புதிய அறிகுறிகளையும் கொரோனா நோயாளிகளிடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதல் நிலையில், காய்ச்சலற்ற நிலையில் தலைவலி, வாசனை இழப்பு, தசை வலி, இருமல், தொண்டைப் புண், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

2-வது நிலையில் காய்ச்சலுடன் கூடிய அறிகுறியில் தலைவலி, வாசனை இழப்பு, இருமல், தொண்டைப் புண், மற்றும் பசியின்மை ஏற்படும்.

3-வது நிலையில் ஏற்கனவே இருக்கும் அறிகுறிகளுடன் பசியின்மையுடன் வயிற்றுப் போக்கும் காணப்படும்.

4-வது வகையான கடுமையான முதல் நிலைஅறிகுறிகளுடன் உடல் சோர்வு ஏற்படும்.

5-வது நிலையான கடுமையான நிலை 2ல் பழைய அறிகுறிகளுடன் மனக்குழப்பம் ஏற்படும்.

6-வது நிலையில் மிகக் கடுமையான 3ம் நிலையில் பழைய அறிகுறிகளுடன் பசியின்மை, மனக்குழப்பம், மூச்சுத் திணறல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.

4,5,6 ஆகிய நிலையில் உள்ள நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சுவாச உதவி தேவைப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாசிட்டிவ்.. இதுவரை 16 தமிழக எம்.எல்.ஏக்களுக்கு பாதிப்பு..

Sun Jul 19 , 2020
இன்று ஒரே நாளில், 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்பட்டுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், நோயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. பொதுமக்களை கடந்து கொரோனாவை எதிர்த்து போரிடும் முன்கள வீரர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு […]
ஒரே நாளில்

You May Like