ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..!

16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது தாத்தா; போக்சோ சட்டத்தில் கைது

16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது தாத்தா; போக்சோ சட்டத்தில் கைது

கோவை: கோவையைச்சேர்ந்த 66 வயது முதியவர், 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரத்தில் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


கோவை மாவட்டம் போத்தனூர், பஜன கோயில் தெருவில் வசித்துவருகிறார் 66 வயதான முதியவர் முகமது பீர் பாஷார். இவர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்களை தவறான கண்ணோட்டத்துடனே அணுகிவந்துள்ளார். இந்த நிலையில் தான் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, உனக்கு ஒகே வான்னு கேட்டு எழுதியுள்ளார். தாத்தா ஏதோ கொடுத்திருக்கிறார் என வாங்கி படித்து பார்த்த சிறுமி, பதற்றத்துடன் அக்கடிதத்தை அவரது அம்மாவிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து இனிமேல் இவ்வாறு நடந்தால் போலீசில் புகார் அளித்திடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் 66 வயதிலும் மீண்டும் அச்சிறுமிக்கு தொந்தரவு அளித்துவந்துள்ளார்.மேலும் சிறுமியிடம் வீட்டில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது தாத்தா; போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயதான முகமது பீர் பாஷா

இதனையடுத்து பயத்தில் சிறுமி வீட்டினை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். பெற்றோர்கள் என்னவென்று விசாரிக்கும் போது நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து, பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரினை விசாரித்த போலீசார், 66 வயது முதியவர் மீது போக்சா சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த தள்ளாடும் வயதிலும் பெண் குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவரும் இந்த முதியவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகிறது.

1newsnationuser2

Next Post

வடசென்னையில் களம் இறங்கிய அதிரடிப்படையினர்; ஊரடங்கினை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்!

Thu Jun 25 , 2020
வடசென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கையினை எடுக்கவும் அதிரடிபடையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் ஆட்டிப்படைத்துவருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது வரை 67 ஆயிரத்து 468 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் தீவிரம் காட்டும் இந்நோயின் பரவலை தடுக்க, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் தேவையின்றி பொது வெளியில் […]
வடசென்னையில் களம் இறங்கிய அதிரடிப்படையினர்; ஊரங்கினை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்!

You May Like