விளையாட சென்ற 7 வயது சிறுமி.! கடுக்காய் வயலில் சடலமாக மீட்பு.! லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்.!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஏழு வயது சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் தொலைந்த மறுநாள் கடுகு பயிரிடப்பட்டுள்ள வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இறந்த அந்த சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஏழு வயது சிறுமி, சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில், தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அந்த சிறுமியின் பெற்றோர்கள் கோட்வாலி தேஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையை துவங்கினர்.

சிறுமி, ஞாயிற்றுக்கிழமை அன்று கடுக்காய் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் சிங் கூறுகையில், மோப்ப நாய்களின் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் சிறுமியின் உறவினர்கள், அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து விசாரிக்க நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Post

பணமோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் 'ED' காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு.!

Mon Feb 12 , 2024
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மற்றும் நில மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் பண பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜனவரி 31ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரங்களுக்கு மேல் அமலாக்கத் துறையினர் […]

You May Like