சூப்பர் நியூஸ்.. 78 நாள் ஊதியத்திற்கு சமமான போனஸ் வழங்கப்படும்…! மத்திய அரசு அறிவிப்பு…!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் புன்னகையை அளிக்கும் வகையில், 2021-22 நிதியாண்டில் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது. தசரா பூஜை விடுமுறைக்கு முன்னதாக இந்த போனஸ் செலுத்தப்படும். மேலும் இந்த முடிவானது சுமார் 11.27 லட்சம் அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.

இதற்கான முக்கிய அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டில், “ரயில்வேயின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 11.27 லட்சம் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RPF, RPSF பணியாளர்களைத் தவிர்த்து அரசிதழில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஊதியம் மாதம் 7000 க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு இணைக்கப்பட்ட போனஸ் ‘ஊதியம்’ 7000 என கணக்கிடப்படும்.

Vignesh

Next Post

பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு...! முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு...!

Mon Oct 3 , 2022
பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று பேரணியில் உரையாற்றிய முன்னாள் இம்ரான் கான், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் கூறினார், இதனால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. தலைநகரில் உள்ள மார்கல்லா காவல் நிலையத்தில் அவருக்கு […]

You May Like