இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு.. டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீசார் சுட்டுக்கொலை.. உ.பியில் பயங்கரம்..

உத்தரப்பிரதேசத்தில் ரவுடி ஒருவரை பிடிக்க சென்ற போது, ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டி.ஸ்.பி உள்ளிட்ட 8 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

ரவுடிகள் நடத்திய

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள திக்ரு கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் விகாஸ் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடிவந்தனர்.

தலைமறைவாக இருந்த விகாஸ், துக்ரு கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று அவரை கைது செய்ய திக்ரு கிராமத்திற்கு விரைந்தனர். டிஎஸ்.பி, காவல் ஆய்வாளர், ஒரு காவல் ஆய்வாளர், காவலர்கள் என பெரிய குழுவினருடன் காவல்துறையினர் ரவுடியை கைது செய்ய சென்றனர்.

எனினும் போலீசார் அந்த கிராமத்திற்குள் நுழைய விடாத வகையில், பல்வேறு தடுப்புகளை ரவுடிகள் உருவாக்கியிருந்தனர். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து, போலீசார் அக்கிராமத்திற்குள் நுழைந்த போது, ஒரு வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் டிஎஸ்.பி தேவேந்திர மிஸ்ரா, காவல் ஆய்வாளர் மகேஷ் யாதவ், அனூப் குமார், உதவி காவல் ஆய்வாளர் நெபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜித்தேந்திரா, பப்லு என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

up police n

இதனையடுத்து கனூஜ், கான்பூர் டெஹட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூத்த காவல்துறை அதிகாரிகள் பலர் அந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தடவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு, தடங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவல்துறையினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், தாக்குதல் குறித்து முழுமையான அறிக்கை அளிக்கவும் அவர் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

தொடர்ந்து உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை!

Fri Jul 3 , 2020
இன்றைய நிலவரப்படி (03.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணையில் விலை குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து தற்போது உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விதித்த கலால் வரி தான் காரணம் என எதிர்க்கட்சிகள் சார்பில் சொல்லப்பட்டு தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து […]
rfid card for fueling at petrol stations10 1584183397

You May Like