தமிழகம் முழுவதும் 2022-ம் ஆண்டில் அதிகரித்த வருவாய்…! பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு…!

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முதன்மையான துறையான வணிகவரித்துறை மூலம் தற்போது வரை 66,000 கோடியில், பதிவுத்துறை மூலம் 8,696 கோடி வருவாய் எட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வணிக வரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத்தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 01.04.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூ.66,161 கோடி ஆகும். இது கடந்த ஆண்டில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூ. 47,873 கோடியை விட ரூ. 18,288 கோடி அதிகமாகும்.

வணிகவரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூபாய் 1,610 கோடியைத் தாண்டியுள்ளது.

1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 8,696 கோடி ஆகும்.

கடந்த ஆண்டில், அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூ.2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூ. 20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும்...!

Tue Oct 4 , 2022
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்‌ தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 60ஆயிரத்திற்கும் […]

You May Like