அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

9 மணி 9 நிமிடங்கள் : விளக்கேற்றுவதற்கு பதிலாக சிகரெட்டை பற்ற வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்..

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்றிரவு 9 மணிக்கு பெரும்பாலோனார் விளக்குகளை ஏற்றிய நிலையில், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா சிகரெட் பற்றவைக்கும் புகைபடத்தை பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ram gopal varma

கொரானா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒருமைப்பாட்டை நிரூபிக்கும் விதமாக நேற்று இரவு நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, தீபங்களை ஏற்றினர்.

திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஒற்றுமை தீபங்களை ஏற்றி, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இன்னும் ஒரு சிலரோ, பட்டாசு வெடித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் இப்படி பட்டாசு வெடித்து கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் விளக்கேற்றிய நிலையில், அவர் விளக்கேற்றுவதற்கு பதிலாக சிகரெட் புகைக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் “ சிகரெட் புகைப்பது குறித்து அரசின் எச்சரிக்கையை பின்பற்றாததை விட, கொரோனா எச்சரிக்கைகளை பின்பற்றாதது ஆபத்தானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ட்விட்டரில் பலரும் அவருக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மோடியின் வேண்டுகோளை ராம் கோபால் வர்மா அவமதித்து விட்டதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்போ கொரோனாவின் தீவிரத்தை உணராமல் செயல்படும் ராம் கோபால் வர்மாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

“தீபாவளியைப் போல உணர்ந்ததால் சுட்டுவிட்டேன்..” மோடியின் கோரிக்கையை தவறாக புரிந்துகொண்ட பாஜக பெண் தலைவர்..

Mon Apr 6 , 2020
பிரதமர் மோடியின் விளக்கேற்றும் கோரிக்கையை தவறாக புரிந்துகொண்ட பாஜக பெண் தலைவர் மஞ்சு திவாரி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி, தீபங்களை ஏற்றி கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தினர். […]
manju tiwari

You May Like