2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

பிரபல நிறுவனத்தில் 95 பேருக்கு கொரோனா: 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 10 ஆயிரம் தொழிலாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

download 37

ஊரடங்கு தளர்வு காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தற்போது துரிதமாக உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில், கடந்த ஜூன் 4ம் தேதியன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் தொழிற்சாலைக்கு பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்பின், தொடர்ச்சியாக தொழிற்சாலையானது இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்த 100க்கும் மேற்பட்டோர், ஏற்கனவே தனமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலருக்கு தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 39

இதையடுத்து, தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் உடனடியாக அவரவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சர் அனந்த்சிங் தலைமையில் ஜிந்தால் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஜிந்தால் தொழிற்சாலையின் பிரத்யேக மருத்துவமனையான சஞ்சீவனி மருத்துவமனையை தற்போது முழு நேர கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

images 38

அங்கு தொழிலாளர்கள் அனைவருக்கும் துரிதமாக பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தொழிற்சாலையை முழுவதுமாக மூட முடியாத காரணத்தால் கொதிகலன்களை மட்டும் பராமரிப்பதற்காக மிக குறைந்த அளவில் தொழிலாளர்களை கொண்டு இயங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜிந்தால் தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் தொழிற்சாலைக்கு வர வேண்டாம் என்றும், பெல்லாரி சுற்றுவட்டார மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

1newsnationuser4

Next Post

எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய ‘சூப்பர்’ முதல்வர்களின் கையில் நிர்வாகம்..? ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்..? ஸ்டாலின் கேள்வி..

Sat Jun 13 , 2020
எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கையில் நிர்வாகம் இருக்கிறதா என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்!இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை, […]
கிராமங்களில்

You May Like