fbpx

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இன்று அதிகாலை முதலே தென்காசி பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல மழை அதிகமாக பெய்தது.

people allowed of bathing in Courtallam main waterfall |குற்றாலம் போற ஐடியா  இருக்கா ? - இதை தெரிஞ்சுக்கோங்க..! | News in Tamil

மதியம் 12 மணி அளவில் மெயின் அருவி, ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இரு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

“ இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாறாது..” காளி சர்ச்சைக்கு மத்தியில் லீனா மணிமேகலை ட்வீட்..

Thu Jul 7 , 2022
இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. […]

You May Like