சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா நாயனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடலட்சுமம்மா (50). இவரது கணவர் ஆஞ்சனப்பா. இந்த தம்பதிக்கு வீனா என்ற மகள் இருக்கிரார். வெங்கடலட்சும்மா அங்கன்வாடியில் பணியாளராக வேலை செய்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கடலட்சுமம்மாவை பிரிந்த ஆஞ்சனப்பா இரன்டாவது கல்யாணம் செய்து கொண்டார். வீனா தந்தையுடன் வசித்து வந்தார். இதனால் வெங்கடலட்சுமம்மா மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென வெங்கடலட்சுமம்மா வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் வெங்கடலட்சும்மமாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சிந்தாமணி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்படது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, வழக்குப்பதிவு செய்து வெங்கடலட்சுமம்மாவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.