fbpx

சிறுவனை கோயிலுக்கு அழைத்துச் சென்ற பெண்… அங்கு சென்று பார்த்து ஷாக்கான போலீசார்…!

மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டம் க்யோடிகி. பகுதியில் வசித்து வருபவர் ராம் லால். அவரது மனைவி மாயா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மாயா நான்காவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்த முறை நிச்சயமா ஆண் குழந்தை பிறந்தே ஆக வேண்டும் என்று ராம் லால் அவரது மனைவியை மிரட்டியுள்ளார். இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதனால் உள்ளூரில் இருந்த போலிசாமியாரிடம் சென்று, மாயா தனக்கு எப்படியாவது. ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட போலி சாமியார் அந்த பெண்ணிடம், சில பூஜைகளை செய்து, சிறுவன் ஒருவனை நரபலி கொடுத்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினார். இதை கேட்ட மாயா சாமியாரிடம் அதற்கு ஒப்புக்கொண்டார்.

போலி சாமியார் சொன்னதை மாயா அவரது கணவரிம் சொன்னார். அதற்கு மாயாவின் கணவர் பலி கொடுப்பதற்கு சிறுவனை எங்கே சென்று தேடுவது என்று கூறி, இருவரும் சேர்ந்து திட்டம் போட்டனர். இந்நிலையில் மாயாவிற்கு பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இருவரும், நேர்த்திக்கடனை செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே அந்த ஊரில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை சாமி கும்பிடலாம் வா என்று கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சிறுவனும் அவர்களுடன் சென்று இருக்கிறான். கோவிலுக்கு சென்றவுடன் ஏற்கனவே அங்கு வைத்திருந்த கத்தியை எடுத்து மாயா அந்த சிறுவனை வெட்டி கொலை செய்துள்ளார். கடந்த ஜூலை ஆறாம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் ஆடு மேய்க்க போன சிறுவனை காணவில்லை என்று அவனது பெற்றோர் தேடி உள்ளனர். அவன் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், அந்த கோவிலுக்கு சென்று பார்த்தபோது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதன் பிறகு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராம் லால், மாயா தம்பத்தினர் தான் இதை செய்தனர் என்பது தெரிய வந்ததால், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அந்த போலி சாமியாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா... மீசை வளர்க்கும் இளம் பெண்..!

Sat Jul 16 , 2022
கேரளா மாநிலம் கண்ணூர் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா (34). இவர் சிறுமியாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்துள்ளது. அப்போது இவரை பார்ப்பவர்கள், அவரின் முகத்தில் உள்ள முடியை பார்த்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். அப்போது அவர் மிகவும் மன வேதனையுடன் இருப்பாராம். பிறகு இவருக்கு அதுவே பழகிவிட்டது. எனவே அதை அவருக்கு பிளஸ் பாயிண்டாக மாற் முடிவு செய்தார். எனவே ஷைஜா […]

You May Like