fbpx

காதலியிடம் சத்தமாக பேசிய இளைஞருக்கு சரமாரி அடி..! சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மண்டை உடைந்தது..!

காதலியிடம் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி அம்பிகா நகரை சேர்ந்தவர் வெற்றி செல்வன் (28). இவர் ஐஐடியில் சிவில் பிரிவில் காங்கீரிட் கலவை தணிக்கை செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு 10.30 மணியளவில் வெற்றிசெல்வன் மற்றும் அவரது நண்பர் சரவணன் (22). இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு வேளச்சேரி டான்சி நகர் அருகே டீக்கடை வெளியே சிக்கன் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வெற்றி செல்வன் அவரது காதலியிடம் செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் சுரேஷ் (25) என்பவர் வேடிக்கை பார்த்துள்ளார். ஏன் என்னையே பார்க்கிறாய் என கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

காதலியிடம் சத்தமாக பேசிய இளைஞருக்கு சரமாரி அடி..! சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மண்டை உடைந்தது..!

உடனே வழக்கறிஞர் சுரேஷ், சட்டக்கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். கற்களை கொண்டு தாக்கியதில் வெற்றி செல்வனுக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இரு தரப்பும் மோதிக் கொண்டது தொடர்பாக பொதுமக்கள் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோதலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மோதலில், படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரு தரப்பும் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் நேரில் வந்து சட்டக் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

Chella

Next Post

ஏமாற்றி சிறுமையை அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து ஓட்டுனர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...!

Tue Jul 19 , 2022
வில் உள்ள புனே பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.   மாணவி தினமும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு பள்ளி பேருந்தில் சென்று பேருந்தில் ஓட்டுனர் ஓட்டுனர் உடன் அந்த மாணவிக்கு நல்ல அறிமுகம் இருந்துள்ளது மேலும் மேலும் அந்த மாணவி பள்ளி முடிந்தவுடன் டியூஷனுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அந்த பேருந்து ஓட்டுனர், அந்த மாணவி படிக்கும் டியூஷனுக்கு […]

You May Like