fbpx

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து, தடையறத் தக்க, மீகாமன், தடம் ஆகியப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த இரண்டுப் படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணியில் உள்ளன.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதியப் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 54-வது படமாக இது தயாராக உள்ளது. சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில், நேற்று உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்த விழாவில் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், யார் இயக்குநர் உள்பட படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. ‘விக்ரம்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், அடுத்ததாக சிவகார்த்திகேயன், விஜய் ஆகியோரை வைத்து படம் தயாரிக்க உள்ள நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

அடங்காத பாலியல் வெறி.. ஆத்திரத்தில் அப்பாவி மாணவி பலியான கொடூரம்..

Tue Jul 26 , 2022
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பரின்கியா என்ற பகுதியில் தயானதீசட்னா என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவியிடம் பள்ளி மாணவி ஒருவர் டியூசன் படித்து வந்தார். டியூசன் படிக்கவந்த மாணவியிடம் தயானதிட்சனா அவரது பாலியல் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதனால், பயந்த மாணவி, ஒரு கட்டத்திற்கு மேல் டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் பென்சில் வாங்க அந்த மாணவி வந்துள்ளார். அப்போது […]
செலவுக்கு பணம் தராததால் பாட்டியை தீவைத்து கொன்ற பேரன்..!! பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு..!!

You May Like